Thursday, February 24, 2011

ஆமணக்கு (கொட்டைச்செடி) Castor oil plant

Ricinus Communis


ஆமணக்கு

சிறிய ஆமணக்கு
 


கும்பகோணத்திற்கு அருகாமையிலுள்ள கொட்டையூர் என்னும் தலத்தில் தலமரவாக விளங்குவது ஆமணக்கு (கொட்டைச்செடி) ஆகும். கை வடிவ இலைகளை மாற்றடுக்காகக் கொண்ட வெண்பூச்சுடைய செடியாகும். உள்ளீடற்ற கட்டைகளையும், முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை அல்லது கொட்டைமுத்து எனப்படுகிறது. இக்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யே விளக்கெண்ணெய் எனப்படுகிறது. தமிழகமெங்கும் புன்செய்ப் பயிராக விளைவிக்கப்படுகிறது. இலை, வேர், எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.
இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும். தாது வெப்பகற்றும். வேர் வாதத்தை குணப்படுத்தும். Source of the above information is from the following link. http://www.shaivam.org/sv/sv_amanakku.htm 



No comments:

Post a Comment