தலவிருட்சமும்.......தோண்டாங்குளமும்.......13 பிப்ரவரி 2022, அன்றைய தினம் கண்டகாட்சி பகிர்ந்துள்ளேன்.
அமைவிடம்- வாலாஜாபாத்துக்கு அருகில் உள்ள ஊர்
தோண்டாங்குளம்
பார்பதற்கு அரிய காட்சி... ஐந்து தலவிருட்சங்கள் ஒன்றாக..
ஆம், பனைமரத்தைச் சார்ந்து...ஆலமரம்,நுணா (மஞ்சநத்தி), இலந்தை மற்றும் எலுமிச்சை. (இதில் எலுமிச்சை நடப்பட்டது மற்றவை தானாக வளர்ந்தவை) எப்படி சாத்தியம் என்றால், பறவைகள்,அணில் பழதின்னி வௌவால் இறைதேடித்திறியும், எங்கு பழம் கிடைக்கிறதோ பறித்துக்கொள்ளும்.சிறிது தூரம் பயணித்து, எங்கு பெரிய மரங்கள் இருக்கிறதோ அங்கு அமர்ந்து பழத்தை உண்டு விதைகளை விட்டுச் சென்று விடும்.ஆம், இப்படித்தான் காடுகள் இன்றும் அழியாமல் காப்பாற்றப்படுகின்றன. இது அறிவியல் ஆய்வுகள் மூலம் நிறுபிக்கப்பட்டுள்ளது..