சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.
சாகை ஆயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.
- திருஞானசம்பந்தர்.திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். இஃது நெடிதுயர்ந்து வளரக் கூடிய பெரிய மரமாகும். பசிய சிறகமைப்புக் கூட்டிலைகளைக் கொண்டது. கொத்தான மகரந்தத் தாள்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இம்மரம் தமிழகத்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றது. வாகைப்பூ நஞ்சு முறிக்கும், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்; பட்டை உடல் வெப்பம் தணிக்கும்.Source of information from http://www.shaivam.org/sv/sv_vaakai.htm |
No comments:
Post a Comment